கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: சிறப்பு மருத்துவக் குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசனை..!

காணொளி காட்சி மூலம் அரசு மருத்துவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: சிறப்பு மருத்துவக் குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசனை..!
முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)
  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு மருத்துவர்களுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தி்ல் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலுக்கான காரணம் குறித்து ஆராய மாநில மற்றும் மாவட்ட அளவிலான சிறப்பு குழுக்களை அமைத்து பொது சுகாதாரத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுக்களில் மாவட்ட சுகாதார இணை இயக்குநர், மருத்துவ கல்லூரி முதல்வர்கள், நுண்ணுயிரியல் நிபுணர்கள் உள்ளிட்ட 15 பேர் பங்கேற்பார்கள். அதேபோல், மாநில அளவிலான குழுவில் பொது சுகாதார இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், சென்னை மாநகராட்சி இயக்குநர் உள்ளிட்ட 18 பேர் பங்கேற்பார்கள் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி அறிவித்துள்ளார்.


இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் அரசு மருத்துவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

Also see...








Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: April 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading