டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தமிழர்கள் 559 பேருக்கு உரிய மருத்துவ வசதிகளை செய்துத்தர வேண்டும்: கெஜ்ரிவாலுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

முகாமில் தங்கியிருந்த முகமது முஸ்தபா என்பவர், கடந்த 22-ம் தேதி உயிரிழந்ததை தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தமிழர்கள் 559 பேருக்கு உரிய மருத்துவ வசதிகளை செய்துத்தர வேண்டும்: கெஜ்ரிவாலுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
முகாமில் தங்கியிருந்த முகமது முஸ்தபா என்பவர், கடந்த 22-ம் தேதி உயிரிழந்ததை தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • Share this:
டெல்லி மாநாட்டில் பங்கேற்றதைத் தொடர்ந்து, மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்துதல் மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 559 பேருக்கு போதிய உணவு மற்றும் மருத்துவ வசதிகளை செய்துத்தர வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களில் தற்போது 183 தமிழர்கள் மருத்துவமனைகளிலும், 376 பேர் தனிமைப்படுத்துதல் முகாம்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்களில் சிலருக்கு நீரிழிவு போன்ற பிரச்சினைகள் இருப்பதாகவும், தனிமைப்படுத்துதல் முகாம்களில் உரிய நேரத்தில் உணவு வழங்கப்படுவதில்லை என்று புகார் வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், முகாமில் தங்கியிருந்த முகமது முஸ்தபா என்பவர், கடந்த 22-ம் தேதி உயிரிழந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரமலான் மாதம் தொடங்கும் சூழலில், தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை உரிய நேரத்தில் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Also see...
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: April 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading