கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.12,000 கோடி தேவை: பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை

கொரோனா தடுப்பு பணிகளுக்கு 12,000 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.12,000 கோடி தேவை: பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை
முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)
  • Share this:
கொரோனா தடுப்பு பணிகளுக்கு 12,000 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 17 மாநில முதல்வர்கள் காணொளியில் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக கொரோனா சோதனைகள் செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை 7,48,000க்கும் மேற்பட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேலும், கொரோனா தடுப்பு பணிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ஏற்கனவே கோரிய 3,000 கோடி நிதியுடன், சிறப்பு நிதியாக 9,000 கோடியும் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
மார்ச் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. நிதியை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்திய முதலமைச்சர், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 1000 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க...

First published: June 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading