கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ₹ 500 கோடி நிதி ஒதுக்கீடு - முதல்வர் அறிவிப்பு

”அரசின் நடவடிக்கை வெளிப்படையாக உள்ளபோதும், எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடரை புறக்கணித்ததன் காரணம் தெரியவில்லை என்று முதல்வர் கூறினார்”

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ₹ 500 கோடி நிதி ஒதுக்கீடு - முதல்வர் அறிவிப்பு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • Share this:
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி,  தமிழகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிக்கும், பெரிய தனியார் மருத்துவமனைகளில் தனி படுக்கைகளை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தி இருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.


மேலும் தேவையான மருந்துகளும், மருத்துவ கருவிகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார். கொரோனா பாதிப்பு இருந்தால், அதனை தெரிவித்து, தனிமைப்படுத்திக் கொள்ளாவிடில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எச்சரித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர், தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா மிகப்பெரிய நோய் என்று குறிப்பிட்டார். அதனை சவாலாக எடுத்துக் கொண்டு முழுமையாக ஒழிப்போம் என்றார்.

மேலும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் முதலமைச்சர் அறிவித்தார். பிரதமரின் உத்தரவு தமிழகத்தில் முழுமையாக பின்பற்றப்பட்டது என்று பெருமிதம் தெரிவித்த அவர், ஒத்துழைப்பு தந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.அரசின் நடவடிக்கை வெளிப்படையாக உள்ளபோதும், எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடரை புறக்கணித்ததன் காரணம் தெரியவில்லை என்றும் முதலமைச்சர் சாடினார்.




இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.



First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading