ஏழை, எளிய மக்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும்...! கொரோனா நிதியுதவி கோரிய முதல்வர்

"சிறு துளி பெரு வெள்ளம்" என்பதற்கு ஏற்ப ஒவ்வொருவரும் சிறு தொகையை வழங்க வேண்டும்.

ஏழை, எளிய மக்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும்...! கொரோனா நிதியுதவி கோரிய முதல்வர்
"சிறு துளி பெரு வெள்ளம்" என்பதற்கு ஏற்ப ஒவ்வொருவரும் சிறு தொகையை வழங்க வேண்டும்.
  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவு நிதியுதவி அளிக்க முன்வர வேண்டும் என்று, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சிறு துளி பெரு வெள்ளம்" என்பதற்கு ஏற்ப தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் சிறு தொகையை வழங்கினாலே பேரிடர் நேரத்தில் ஏழை, எளிய மக்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும் என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

ECS மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பலாம் என்றும், வெளிநாடுவாழ் இந்தியர்கள் SWIFT Code-ஐ பயன்படுத்தி பணம் செலுத்தலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Also see...









சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading