பொருளாதாரத்தில் பின் தங்கிய வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க பார் கவுன்சில் கோரிக்கை

பொருளாதாரத்தில் பின் தங்கிய வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க பார் கவுன்சில் கோரிக்கை
  • Share this:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளதால், பொருளாதாரத்தில் பின் தங்கிய இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 20000 ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து, பொருளாதாரத்தில் பின் தங்கிய இளம் வழக்கறிஞர்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்களுக்கு மாதம் இருபது ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், தமிழகத்தில் சுமார் ஒரு லடசத்திற்கும் மேற்பட்டோர் முழு நேர வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் நிலையில், கடந்த 24 ஆம் தேதி பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களுக்கு அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் வைத்த கோரிக்கையை பரிசீலித்து தமிழகத்தில் பணியாற்றும் இளம் மற்றும் பெண் வழக்கறிஞர்களுக்கு இந்த நிதி உதவியை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.


Also see...
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading