திமுக-வில் மேலும் ஒரு எம்.எல்.ஏ-விற்கு கொரோனா பாதிப்பு

திமுக-வில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.

திமுக-வில் மேலும் ஒரு எம்.எல்.ஏ-விற்கு கொரோனா பாதிப்பு
(கோப்புப் படம்)
  • Share this:
திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான கணேசன் தொற்று உறுதியானதை அடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை 4 அமைச்சர்கள் உட்பட 13 சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

திமுகவில் சேப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த ஜெ. அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில். செஞ்சி மஸ்தான், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், செய்யாறு ஆர்.டி. அரசு ஆகியோர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர்.


Also Read : விருத்தாசலம் வட்டாச்சியர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை கொரோனவால் 1,65,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,13,856 பேர் குணமடைந்தும், 2403 பேர் உயிரிழந்தும் உள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் 4807 பேர் பாதிக்கப்பட்டும், 88 பேர் உயிரிழந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

 
First published: July 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading