கொரோனாவின் பாதிப்புக்கு திருமலை திருப்பதியும் தப்பவில்லை, 40 நாட்கள் ஊரடங்கு காலத்தில் 400 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகின் அதிக வருமானம் உடைய வசதியான கோயிலாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் வந்து சென்றதால் உண்டியல் காணிக்கை, விடுதிக் கட்டணம் என பல வழிகளில் வருவாய் கிடைத்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் கோயில் நடை அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்களுக்கு 50% மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 40 நாட்கள் ஊரடங்கால் திருப்பதி கோயிலுக்கு ரூ.400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்டதாக திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் சுமார் 120 கோடி ரூபாய் வரை மாத சம்பளமாக ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஊழியர்களுக்கு சம்பளமும், ஓய்வூதியமும் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊதியம், ஓய்வூதியம் மற்றும் நிரந்தர செலவுக்காக ஆண்டுதோறும் 2 ஆயிரத்து 500 கோடி செலவிடப்படும் என்ற அவர், இவற்றிற்காக ஏற்கனவே 300 கோடி செலவிடப்பட்டுவிட்டதாக தெரிவித்து இருக்கிறார். அதே போல, பணப்புழக்கம் முழுவதும் தடைபட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளில் வைப்பு நிதியாகவும் 8 டன் தங்கமாகவும் வைப்பில் உள்ளது. ஆனால் இதில் கைவைக்காமல் செலவுகளை சமாளிக்க வேண்டும் என்பதே திருப்பதி தேவஸ்தானத்தின் திட்டமாகும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.