Home /News /coronavirus-latest-news /

ஒரு கோடி பக்தர்கள்... ஆயிரம் கோடி ரூபாய் பணப்புழக்கம்...! கொரோனாவால் திருப்பதிக்கு ஏற்பட்ட இழப்பு

ஒரு கோடி பக்தர்கள்... ஆயிரம் கோடி ரூபாய் பணப்புழக்கம்...! கொரோனாவால் திருப்பதிக்கு ஏற்பட்ட இழப்பு

திருப்பதி (கோப்புப் படம்)

திருப்பதி (கோப்புப் படம்)

கொரோனா ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக திருப்பதி கோயிலுக்கு 1 கோடி பக்தர்கள் வராததால், 1000 கோடி ரூபாய் அளவு பணப்புழக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் கடந்த ஜூன் 11ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. ஊரடங்குக்கு முன் தினமும் 70 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 1 லட்சம் பேரும் திருப்பதி கோயிலுக்கு வந்து சென்றனர்.

    ஆனால் கொரோனா அச்சம் காரணமாக பக்தர்களின் வருகை படிப்படியாக குறைந்துள்ளது. இதுவரை மூன்றரை லட்சம் பேர் மட்டுமே திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளனர். 1 கோடி பக்தர்கள் வராததால் 400 கோடி ரூபாய் காணிக்கை வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.

    Also read... சில நிமிடங்களில் கொரோனாவை கண்டறிய டெஸ்ட் கருவி - பரிசோதிக்க இந்தியா வருகிறது இஸ்ரேல் குழு

    தங்கும் அறைகள், பிரசாதம் என்ற வகையில் 600 கோடி ரூபாய் வருவாய் பாதித்துள்ளது. இதேபோல் பக்தர்களை நம்பியுள்ள விடுதிகள், ஹோட்டல்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன.

     
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி