கொரோனா பரவலால் வெகுவாக குறைந்த பக்தர்கள் வருகை - இலவச தரிசனத்தை நிறுத்திய திருப்பதி தேவஸ்தானம்

கொரோனா பரவல் எதிரொலியாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன சேவை இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால் வெகுவாக குறைந்த பக்தர்கள் வருகை - இலவச தரிசனத்தை நிறுத்திய திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி கோவில் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: July 21, 2020, 9:14 PM IST
  • Share this:
திருப்பதி ஏழுமலையான் கோயில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. பக்தர்களை தரிசனத்திற்காக அனுமதித்த பின் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், கோயில் ஜீயர், அர்ச்சகர்கள், ஊழியர்கள், போலீசார் உட்பட 150 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இலவச தரிசனம் செய்ய செல்பவர்கள் அலிபிரியில் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து சிறப்பு தரிசன டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 300 ரூபாய் சிறப்பு தரிசன டோக்கன் தினமும் 9 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் உள்ள 50 வார்டுகளில் 48 வார்டுகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

படிக்க: மரத்தை வெட்டி சிபிஐ அதிகாரியிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட சாத்தான்குளம் காவல் ஆய்வாளர்

படிக்க: புதுக்கோட்டை அருகே 108 ஆம்புலன்சில் நடந்த பிரசவம் - அழகான ஆண் குழந்தை பிறந்தது


கொரோனா அச்சம் காரணமாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. 12 ஆயிரம் பக்தர்கள் சாமி கும்பிட வாய்ப்பு இருந்தும் 5767 பேர் மட்டுமே நேற்று ஏழுமலையானை வழிபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading