இனி ஈவு இரக்கம் காட்டாதீர்கள்...! போலீஸ் டி.எஸ்.பி வெளியிட்ட ஆடியோ - வீட்டுக்குள் முடங்கிய மக்கள்

இனி ஈவு இரக்கம் காட்டாதீர்கள்...! போலீஸ் டி.எஸ்.பி வெளியிட்ட ஆடியோ - வீட்டுக்குள் முடங்கிய மக்கள்
  • Share this:
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களிடம் ஈவு இரக்கம் காட்டாதீர்கள் என்று போலீஸ் உயர் அதிகாரி வெளியிட்ட ஆடியோ சமூகவலைதளங்களில் பரவியதை அடுத்து மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் தமிழக அரசு சார்பில் கொரோனா பரவலை தடுக்க 144 உத்தரவு பிறப்பித்த சில நாள்கள் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மக்கள் சுய ஊரடங்கினை கடைபிடிக்க வேண்டும் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். காவல்துறையினர் வேண்டுகோளை யாரும் மதிக்கமால் வழக்கம் போல மக்கள் நடமாடி வந்தனர்.

கிராமப்புறங்களில் சிலர் மீன் பிடித்து கூட்டாஞ்சோறு சமைப்பது, கொரோனாவை கிண்டல் செய்து டிக்டாக் போடும் வேலையை செய்து வந்தனர். இதனைத் தொடர்ந்து ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை காவல்துறையினர் தோப்புக்கரணம் போட வைத்தனர். இதற்கும் மக்கள் கட்டுபட்டதாக தெரியவில்லை. இதனை தொடர்ந்து கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ் காவல்துறையினரிடம், போலீசாருக்கான வாட்ஸ் அப் குழுவில் பேசிய பேச்சு தான் மக்களை வீட்டுக்குள் இருக்கச் செய்துள்ளது.


கோவில்பட்டி டி.எஸ்.பி ஜெபராஜ் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்து வாட்ஸ் அப்-ல் வெளியிட்ட ஆடியோவில் கூறியிருப்பதாவது, “ஊரடங்கு உத்திரவை பின்பற்ற சொல்லி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்தோம். மீறி வந்தவர்களை எச்சரித்து அனுப்பியும் பலன் இல்லை. இதனால் உயர் அதிகாரிகள் விமர்சனத்திற்கு உள்ளாக வேண்டிய நிலையில் இருக்கிறோம். மார்க்கெட் விடுமுறை என்பதால் மக்கள் அதிகமாக வந்தனர். அதனை நாம் கட்டுபடுத்தினோம்.

ஆனால் இனி மதியம் 2.30க்கும் மேல் வந்தால் ஈவு இரக்கம் காட்ட கூடாது. 2.30 மணிக்கும் மேல் சுற்றி திரிபவர்கள் வாகனங்களை பிடிக்க வேண்டும். மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், சுகாதார துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை பார்த்து கையாள வேண்டும். அவர்களை அடித்து விடக்கூடாது. 144 தடை உத்தரவினை மீறுபவர்களை தண்டியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆடியோ சமூக வளைங்களில் வைரலாக பரவியதால் கோவில்பட்டி நகரில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதை மீறி சுற்றியவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார் மற்றும் 200க்கும் மேற்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.அடி உதவுவது போன்று அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜீன் ஆடியோவினால் கோவில்பட்டி நகரில் ஊரடங்கு என்பது வெற்றிகரமாக மாறியுள்ளது.

மேலும் படிக்க: கொரோனா வைரஸ் தாக்கி பிரபல பாடகர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading