• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • அடிப்படை வசதிகள் இல்லை... பரிசோதனை நடத்துவதில் தாமதம்...! நெல்லை கொரோனா முகாமின் நிலை

அடிப்படை வசதிகள் இல்லை... பரிசோதனை நடத்துவதில் தாமதம்...! நெல்லை கொரோனா முகாமின் நிலை

News 18

News 18

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரக்கூடிய இடத்தில் ஒரு 20 லிட்டர் கேனில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கங்கைகொண்டான் முகாம் உள்ளிட்ட 5 இடங்களில் நேற்று 696 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 23 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கங்கைகொண்டான் முகாமில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழிப்பறை, குடி தண்ணீர் வசதி கள் இல்லை என்றும் புகார் கூறப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரக்கூடிய இடத்தில் ஒரு 20 லிட்டர் கேனில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.

சோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும் தனி மனித விலகல் கடைபிடிக்கப்படவில்லை. தொற்று இருப்பவர்களின் அருகில் மற்றவர்கள் நெருக்கமாக நிற்பதால் அனைவருக்கும் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

நெல்லைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும், போதுமான எண்ணிக்கையில் சோதனைக் கருவிகள் இல்லாததாலும் தற்போது வருபவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இது சமூக பரவலுக்கு வழி வகுக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: