Home /News /coronavirus-latest-news /

திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ சீத்தாபதிக்கு கொரோனா தொற்று.. மருத்துவமனையில் அனுமதி..

திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ சீத்தாபதிக்கு கொரோனா தொற்று.. மருத்துவமனையில் அனுமதி..

கோப்புப் படம்

கோப்புப் படம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திமுக எம்எல்ஏவாக சீத்தாபதி சொக்கலிங்கம், அவரது கணவர் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீதாபதிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. முன்கள பணியாளர்கள், காவலர்கள், அரசியல்வாதிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில், திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீத்தாபதிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவரது கணவர் சொக்கலிங்கத்திற்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால் இருவரும் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    திமுக எம்எல்ஏ சீத்தாபதி


    மேலும் படிக்க..லடாக் எல்லைப்பகுதியில் பதற்றம்: இந்திய - சீன கமாண்டர்கள் பேச்சுவார்த்தை..



    தமிழகத்தில் எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் என 40-க்கும் மேற்பட்டோர் இதுவரை தொற்று பாதிப்புக்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Villupuram

    அடுத்த செய்தி