“மற்றொரு பார்ட்னர்ஷிப்புக்கான தருணம் இது“ கைப் - யுவராஜை புகழ்ந்த பிரதமர் மோடி

“மற்றொரு பார்ட்னர்ஷிப்புக்கான தருணம் இது“ கைப் - யுவராஜை புகழ்ந்த பிரதமர் மோடி
யுவராஜ் சிங் - கைப்
  • News18
  • Last Updated: March 21, 2020, 4:38 PM IST
  • Share this:
கொரோனா பரவாமல் தடுக்க தேசிய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க கேட்டு கொண்ட கைப் மற்றும் யுவராஜ் சிங்கை பிரதமர் மோடி புகழந்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக நாளை(மார்ச் 22) தேசிய ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தேசிய ஊரடங்கு உத்தரவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் கைப், பிரதமர் மோடியின் தேசிய ஊரடங்கு உத்தரவை மக்கள் பின்பற்றுமாறு ட்விட்டரில் கேட்டுக் கொண்டுள்ளனர்.


கைப் மற்றும் யுவராஜ் சிங்கின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இங்கு 2 தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அவர்களின் பார்டனர்ஷிப்பை எப்போது நினைவில் வைத்திருப்போம். தற்போது இவர்கள் கூறியது போல மற்றொரு பார்ட்னர்ஷிப்புக்கான நேரம் இது. இந்த முறை கொரோனா வைரஸ் எதிராக இந்தியா முழுவதும் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும்“ எனறுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற நாத்வெஸ் தொடரில் கைப் - யுவராஜ் சிங் பார்ட்னர்ஷிப் வைத்து தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணியை வெற்றி பெற செய்தவர்கள். இந்தப் போட்டியின் போது அப்போதைய இந்திய அணியின் கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலி தனது சட்டை கழற்றி சுற்றுவார். இந்த போட்டியை யாராலும் மறக்க முடியாது, அதை தான் பிரதமர் மோடி தற்போது தனது ட்விட்டரில் நினைவு கூர்ந்துள்ளார்.

 
First published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading