புலிக்கு கொரோனா தொற்று உறுதி... மத்திய வன உயிரியல் ஆணையம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை..!

வன உயிரியல் பூங்காக்களும் மாநில பொது சுகாதாரத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிக்கு கொரோனா தொற்று உறுதி... மத்திய வன உயிரியல் ஆணையம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை..!
புலிக்கு கொரோனா தொற்று.
  • Share this:
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. அமெரிக்காவில் புலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு வன உயிரின பூங்காவில் உள்ள விலங்குகளையும் தீவிர கண்காணிப்பு செய்யுமாறு கோரியுள்ளது.

இதுகுறித்து மத்திய வன உயிரியல் ஆணையம் மாநிலங்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “சிசிடிவி மூலமாகவோ,நேரடியாகவோ விலங்குகளின் நடவடிக்கைகளில் வழக்கத்திற்கு மாறாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பாதுகாப்பு கவச உடைகள் இல்லாமல் விலங்குகளை பராமரிப்பாளர்கள் அணுகக் கூடாது.

மாமிசம் உண்ணிகள், சிங்கம்,புலி போன்ற பெரிய பூனை வகையினங்கள், மரநாய்கள், குரங்கினங்களை கூடுதல் கவனத்தோடு கண்காணிக்க வேண்டும்.


ஏதேனும் விலங்கிற்கு அறிகுறி தென்பட்டால் 2 வாரங்களுக்கு ஒரு முறை கோவிட்19 நோய்க்கான மாதிரிகளை அனைத்து வகையான பாதுகாப்பு வசதிகளோடு எடுத்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் சோதிக்க வேண்டும். அனைத்து வன உயிரியல் பூங்காக்களும் மாநில பொது சுகாதாரத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கொரோனாவுக்கு எதிராக இது நீண்ட போராக இருக்கும்; நாம் சோர்ந்துவிடக் கூடாது - பிரதமர் மோடி

First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading