கொரோனாவின் புதிய அறிகுறிகள்- மருத்துவர்கள் எச்சரிக்கை

கொரோனாவின் புதிய அறிகுறிகள்

கொரோனா தோன்றி 2 ஆண்டுகள் ஆகப்போகிறது, இன்னும் மறைந்தபாடில்லை, இந்நிலையில் மேலும் சில நோய் அறிகுறிகள் இருந்தால் அது கொரோனாவாக இருக்கலாம் என்று கொரோனா பணிக்குழு, மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா தோன்றி 2 ஆண்டுகள் ஆகப்போகிறது, இன்னும் மறைந்தபாடில்லை, இந்நிலையில் மேலும் சில நோய் அறிகுறிகள் இருந்தால் அது கொரோனாவாக இருக்கலாம் என்று கொரோனா பணிக்குழு, மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

  கோவிட்டின் பிரதான அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல், தொண்டைக்கட்டு, மூச்சுத் திணறல் இல்லாவிட்டாலும், காது கேளாமை, பயங்கரத் தலைவலி, நாக்கு வறளுதல் போன்றவை இருந்தால் உடனடியாக கோவிட் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு கோவிட் பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவிட் 19 டாஸ்க் ஃபோர்சில் உள்ள டாக்டர் ராகுல் பண்டிட் கொரோனா வைரஸ் தாக்கியதற்கான புதிய அறிகுறிகள் பற்றி ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

  காது கேளாமை, இமைப்படல அழற்சி, கண் எரிச்சல், கடுமையான களைப்பு, நாக்கு வறட்சி, எச்சில் ஊறுவதில் குறைவு, நீண்ட நேர தலைவலி, சருமக்கோளாறுகள் உள்ளிட்டவையும் கொரோனா அறிகுறிகளாக இருக்கலாம் என்கிறார்.

  மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஏற்பாடு செய்த ஆன்லைன் சந்திப்பில் கொரோனா புதிய அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு தேவை என்று எச்சரித்தார். ஆனால் டாக்டர் சமீர் பார்கவா என்பவர், கொரோனாவினால் காது கேட்பதில் கோளாறுகள் இருப்பது வெகு அரிதானதே என்கிறார். எப்படி வாசனை தெரியாமல் போகிறதோ அதே போல் காது கேட்பதில் சிரமம் ஏற்படலாம். ஆனால் கோவிட்டினால் காது கேட்காமல் போனதாக இதுவரை இந்தியாவில் பயப்படும் அளவுக்கு எதுவும் நடந்து விடவில்லை என்கிறார் இவர். ஸ்டீராய்ட் மருத்துவம் எடுத்துக் கொண்டவர்களுக்கு அரிதாக காது கேளாமை ஏற்படுகிறது என்றார்.

  டாஸ்க் ஃபோர்ஸின் தலைவர் டாக்டர் சஞ்சய் ஓக் கொரோனா நோய் அறிகுறிகளின் பலதரப்பட்ட விஷயங்களை அறிவுறுத்தினார். கொரோனா 2வது அலையின் போது டெல்டா வேரியண்ட்டினால் நிறைய பேருக்கு உணவு-குடல் பாதையில் அறிகுறிகள் தோன்றியுள்ளன. இதனால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, போன்ற அறிகுறிகள் தோன்றியதைக் குறிப்பிட்டார். அதே போல் காய்ச்சல் வருவதும் போவதுமாக இருந்ததையும், தீவிர காய்ச்சல் ஏற்பட்ட சந்தர்ப்பங்களையும் அலசினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: