ஒரே நாளில் 21 ஆயிரத்திற்கும் மேல் புதிய தொற்று - அச்சத்தை ஏற்படுத்தும் 3 மாநிலங்கள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், மகாராஷ்ட்ராவில் மட்டும் 10, 576 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 21 ஆயிரத்திற்கும் மேல் புதிய தொற்று - அச்சத்தை ஏற்படுத்தும் 3 மாநிலங்கள்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 23, 2020, 7:28 AM IST
  • Share this:
மாகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகத்தில் மட்டும் ஒரே நாளில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொற்று புதிய உச்சங்களை தொட்டு வந்தது. இந்நிலையில், அந்த மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரே நாளில் 10,576 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 228 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பு 12,556-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 6045 பேரை பெருந்தொற்று பாதித்துள்ளது. அந்த மாநிலத்தில் 65 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 823 ஆக உயர்ந்துள்ளது.

படிக்க: மார்ச் மாதத்தைவிட ஜூன் மாதத்தில் மும்மடங்காக அதிகரித்துள்ள மின்கட்டணம்- காரணம் என்ன?

படிக்க: செல்ல மகனிடம் அன்பை பொழியும் நடிகை ஏமி ஜாக்சன் - கியூட் புகைப்படங்கள் படிக்க: த்ரிஷாவுடன் திருமணமா? நடிகர் சிம்பு தரப்பு விளக்கம்
கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட முதல்நாளான புதன்கிழமை மட்டும் புதிதாக 4,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் புதிதாக 55 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 1519 ஆக உயர்ந்துள்ளது.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading