கொரோனா வைரஸ் அபாயம் - ஹாங்காங் கப்பலில் சிக்கியிருந்த 3,600 பயணிகள் விடுவிப்பு

கொரோனா வைரஸ் அபாயம் - ஹாங்காங் கப்பலில் சிக்கியிருந்த 3,600 பயணிகள் விடுவிப்பு
  • News18
  • Last Updated: February 10, 2020, 12:41 PM IST
  • Share this:
ஹாங்காங்கில் சொகுசுக் கப்பலில் அடைபட்டிருந்த  மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் நான்கு நாட்களுக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசித்துள்ளனர்.

ஹாங்காங்குக்கு கடந்த புதன்கிழமை வந்த ’வேர்ல்ட் ட்ரீம்’ என்ற அந்த சொகுசுக் கப்பலிலிருந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. அது பற்றி துறைமுக நிர்வாகத்துக்கு கேப்டன் தெரிவித்ததால் அந்த கப்பல் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தது. வெளியிலுள்ளவர்களுக்கு அண்ட வைரஸ் பரவக் கூடாது என்பதற்காக பயணிகள் யாரும் கப்பலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.

பின்னர் கப்பலில் உள்ளவர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வேறு எவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதியானது. இதைத் தொடர்ந்து, நான்கு நாட்கள் கப்பலிலேயே சிக்கியிருந்த 3,600 பயணிகள் அதிலிருந்து இறங்க அனுமதிக்கப்பட்டனர்.


Also see...

 
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading