• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ரேஷன் கார்டுக்கு ₹ 1000 - வீடுகளுக்கே சென்று வழங்கும் ஊழியர்கள்

ரேஷன் கார்டுக்கு ₹ 1000 - வீடுகளுக்கே சென்று வழங்கும் ஊழியர்கள்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கே சென்று 1000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • Share this:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த 4 மாவட்டங்களிலும் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கே சென்று 1000 ரூபாய் நிதியுதவி  வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் இன்று முதல் 26-ஆம் தேதி வரை வீடுகளுக்கே சென்று  ரேஷன் கடை ஊழியர்கள்  காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பயனாளிகளுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்குகின்றனர்.

Also see:

சென்னையில் புஷ்பாநகர், காமராஜபுரம், எல்லிஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நியாய விலைக் கடை ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று 1000 ரூபாய் நிவாரணம் வழங்கினர். சென்னையில் 21.83 இலட்சம் அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு கடை ஊழியர்களும் நாளொன்றுக்கு 200 அட்டைதாரர்களுக்கு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 5 நாட்களுக்கு நியாய விலைக் கடைகள் திறக்கப்பட கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: