144 தடை உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை!

அத்தியாவசிய தேவைகளில் ஈடுபடும் நபர்கள் உரிய அடையாள அட்டை அல்லது அனுமதிக் கடிதம் பெற்று பயணிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

144 தடை உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை!
மாதிரி படம்
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவு நேற்று மாலை 6 மணியிலிருந்து அமலுக்கு வந்தது. 5 பேருக்கு மேல் ஒன்றுகூடக் கூடாது, தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றக்கூடாது போன்ற எச்சரிக்கைகளை காவல்துறை விடுத்திருந்தது.

ஆனால், நேற்று இரவு பலர் சென்னை சாலைகளில் வாகனங்களில் வலம் வந்தனர். குறிப்பாக, ஜி.எஸ்.டி சாலை, ஓ.எம்.ஆர் சாலை, ஈ.சி.ஆர் சாலை ஆகியவற்றில் வெளியூர்களிலிருந்து சென்னைக்குள் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். பின்னர், தடை உத்தரவை பின்பற்றுமாறு எச்சரித்து அனுப்பினர்.

சென்னைக்குள் நுழையும் வாகனங்களைத் தடுக்க, எல்லைகளில் 8 காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு மீறலை கண்காணிக்க 30 பறக்கும் படைகளும், 400 ரோந்து வாகனங்களும் நேற்று இரவு சென்னை முழுக்க வலம் வந்தனர்.


முதல்நாள் என்பதால் எச்சரித்து அனுப்பிய போலீசார், இனிமேல் தடை உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளனர். ஆனால், இதுவரைக்கும் யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை.

அத்தியாவசிய தேவைகளில் ஈடுபடும் நபர்கள் உரிய அடையாள அட்டை அல்லது அனுமதிக் கடிதம் பெற்று பயணிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Also see:
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்