பொது இடங்களில் முகக்கவசம் அணியாதோருக்கு 1000 ரூபாய் அபராதம்..

முகக்கவசம் (கோப்புப்படம்)

கர்நாடகாவில் முகக்கவசம் அணியாவிட்டால் நகர்ப்புறங்களில் ஆயிரம் ரூபாயும், கிராமப்புறங்களில் 500 ரூபாயும் அபராதம் விதிக்க முடிவுசெய்யப்பட்டது. பொது நிகழ்ச்சிகளில் 50-க்கும் மேற்பட்டோருக்கு மேல் கூடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது என்றும் அரசு முடிவுசெய்துள்ளது.

 • Share this:
  கர்நாடகாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  கர்நாடகாவில் தற்போது கொரோனா வேகமாக பரவிவருகிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று முன்தினம் 10,453 பேருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில், மூத்த தலைவர்களுடன் மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் ஆலோசனை நடத்தினார்.

  இதையடுத்து, முகக்கவசம் அணியாவிட்டால் நகர்ப்புறங்களில் ஆயிரம் ரூபாயும், கிராமப்புறங்களில் 500 ரூபாயும் அபராதம் விதிக்க முடிவுசெய்யப்பட்டது.  பொது நிகழ்ச்சிகளில் 50-க்கும் மேற்பட்டோருக்கு மேல் கூடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது என்றும் அரசு முடிவுசெய்துள்ளது.
  Published by:Sankaravadivoo G
  First published: