நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார். தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசிக்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசி போடப்படுவர்கள் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து இடுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில்.” கோவாக்சின் தடுப்பு மருந்து இன்னும் பரிசோதனையில் உள்ளன என்பதை நான் அறிவேன். இன்னும் அது கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு தரும் என ஆய்வு முடிவுகள் வரவில்லை என தெரியும். தெரிந்து தான் தடுப்பூசி எடுத்துக் கொள்கிறேன் என கையெழுத்திட வேண்டும்.” இவ்வாறு அந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.