28 நாட்களுக்குக் கண்காணிக்கப்படுவீர்கள் - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

கோப்பு படம்

 • Share this:
  கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனா, வடகொரியா, இத்தாலி மற்றும் ஈரான் நாடுகளில் இருந்து வருபவர்கள் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  சீனாவின் ஊஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவில் மட்டும் இதுவரை 2 ,715 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ள நிலையில், 78 ,000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவைப் போன்று இத்தாலி, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

  Also see...சீனாவின் ஊஹானிலிருந்து அழைத்துவரப்படும் 112 இந்தியர்கள்!

  இதனால், இந்த நாடுகளில் இருந்து வருவோர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, 28 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என மாநில பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை சீனாவில் இருந்து வந்த 2, 327 பேர் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

  அதிகபட்சமாக சென்னையில் 682 பேரும், ராமநாதபுரத்தில் 219 பேரும், புதுக்கோட்டையில் 150 பேரும், காஞ்சிபுரத்தில் 103 பேரும் கண்காணிப்பில் உள்ளனர். இதனிடையே, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாள்தோறும் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாக குறைந்துள்ளதாகவும், இதுவரை 29,745 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  Also see...கொரோனாவிற்கு குட்பாய்... நல்வாய்ப்பாக தொற்றிலிருந்து தப்பியது குழந்தை!

   

   
  Published by:Sankaravadivoo G
  First published: