• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சூப்பர் மார்க்கெட் போன்ற மூடிய அறைகளில் கொரோனா எப்படி பரவுகிறது? 3டி வீடியோ

சூப்பர் மார்க்கெட் போன்ற மூடிய அறைகளில் கொரோனா எப்படி பரவுகிறது? 3டி வீடியோ

கடை

கடை

இந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவில் தமிழகத்தை சேர்ந்த ஜீவானந்தன் என்பவரும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

  • Share this:
    ஊரடங்கும், முகக்கவசம் அணிவதும் ஏன் அவசியம் என்பதையும், கொரோனா வைரஸ் பரவும் விதம் குறித்தும் விளக்கும் 3டி தொழில்நுட்பத்தில் வீடியோ ஒன்று ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

    சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துவருகிறது. இந்தநிலையில், ஃபின்லாந்து நாட்டிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் சூப்பர் மார்கெட் போன்ற மூடிய அறையிலுள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை விவரிக்கும் வகையில் 3டி தொழில்நுட்பத்தில் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த 3டி வீடியோவை ஆல்டோ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
    இந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவில் தமிழகத்தை சேர்ந்த ஜீவானந்தன் என்பவரும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் சூப்பர் மார்க்கெட் போன்ற மூடிய அறைகொண்ட ஒரு இடத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போது அவரிடமிருந்து வெளிப்படும் நீர்க்குமிழ்கள் மூலம் கொரோனா வைரஸ் நீண்ட தூரத்துக்கு பரவுவது தெளிவாக விளக்கப்படுகிறது.



    இந்த ஆராய்ச்சியை, ஆல்டோ பல்கலைக்கழகம், ஃபின்லாந்து வானிலை ஆய்வு நிறுவனம், வி.டி.டி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ஒன்றிணைந்து ஆய்வு செய்து உருவாக்கியுள்ளனர். கொரோனா பாதித்த ஒருவர் தும்மிய சில நிமிடங்களில் கொரோனா பலருக்கு பரவுகிறது என்பதை தெளிவாகத் தெரிகிறது.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: