12 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்ட கொரோனா: வைரலாகும் புத்தக வரிகள்

12 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்ட கொரோனா: வைரலாகும் புத்தக வரிகள்
  • Share this:
12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'என்ட் ஆஃப் டேஸ்' என்ற புத்தகத்தில் 2020ம் ஆண்டு மிகவும் மோசமான வைரஸ் பாதிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் 2008ம் ஆண்டு சில்வியா பிரவுன் வெளியிட்ட  'என்ட் ஆஃப் டேஸ்' புத்தகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல் இருந்துள்ளது.

கொரோனா வைரஸ் குறித்த புத்தகத்தின் பக்கம் இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில், "2020 ஆம் ஆண்டில் கடுமையான நிமோனியா போன்ற நோய் உலகம் முழுவதும் பரவி, நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் குழாய்களைத் தாக்கும். உலகின் தலைசிறந்த மருத்துவர்களால் கூட இதை கட்டுபடுத்த முடியாது“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தில் கொரோனா வைரஸ் என்று குறிப்பிடாமல் இருந்தாலும் உலகம் எதிர்கொள்ளும் தாக்கம் 12 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஆனால் அதில் ஒரு குழப்பமும் ஏற்பட்டுள்ளது. என்னவென்றால் அதுவந்த உடன் திடிரென மறைந்து விடும். மேலும் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தாக்கி பின்னர் முற்றிலும் மறைந்து விடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
First published: March 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading