2 உலகப்போர்... 7 பிரிட்டிஷ் மன்னர்கள்... 187 ஆண்டுகள் கடந்தும் தன்னம்பிக்கை தரும் 'ஜெனாதன்'!

2 உலகப்போர்... 7 பிரிட்டிஷ் மன்னர்கள்... 187 ஆண்டுகள் கடந்தும் தன்னம்பிக்கை தரும் 'ஜெனாதன்'!
ஜொனதன் ஆமை
  • Share this:
உலகின் மிகவும் வயதான ஆமை ஜெனாதன் 2 உலகப்போர், பிரிட்டிஷின் 7 மன்னர்களை கடந்து இன்றும் உயிருடன் வாழ்ந்து வருகிறது.

உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு சர்வதேச அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்து உள்ளது. வல்லரசு நாடுகளே கொரானோவை கண்டு அஞ்சி செய்வது அறியாமல் திகைத்து உள்ளது.

ஒரு வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே புரட்டிப்போட்டு அனைவரின் வாழ்க்கை முறையே மாற்றி உள்ளது. கொரோனா வைரஸ் இன்று தாக்குமோ நாளை தாக்குமோ என்ற அச்சத்தில் பலர் தங்களது வாழ்க்கையை பயத்திலேயே கடந்து வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் கொரோனா வைரஸ் எல்லாம் ஒரு தூசி தான் என்பதை உணர்த்தும் வகையில் 187 ஆண்டுகாலமாக வாழ்ந்து வரும் ஆமையின் புகைப்படம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இயற்கை பாதுகாப்பு சர்வதேச ஒன்றியம் (IUCN) உறுப்பினரான பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டரில் பக்கத்தில் தான் இந்த ஆமையின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “உலகின் மிகவும் வயதான இந்த ஆமை 1832-ம் ஆண்டு முதல் உயிர் வாழ்ந்து வருகிறது. ஜெனாதன் தன் வாழ்நாளில் முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர், ரஷ்ய கிளர்ச்சி, பிரிட்டிஷ் சம்ராஜயத்தின் 7 மன்னர்கள், 39 அமெரிக்க அதிபர்கள் கடந்துள்ளது. கொரோனா உட்பட எல்லாம் கடந்து போகும்“ என்று அனைவருக்கும் தன்னம்பிக்கை தரும் விதமாக இதை பதிவிட்டுள்ளார்.ஆமைகள் பொதுவாக நீண்ட நாட்கள் வாழ்ந்து வருபவை. பல்வேறு கடினமான காலங்களை கடந்து நமக்கு தன்னம்பிக்கை தரும் ஜெனாதன் போன்றவற்றால் தான் நம்பிக்கை அதிகரிக்கிறது. நல்ல நேரங்களை போல் மோசமான காலங்களும் நம்மை விட்டு கடந்து செல்லும் என்பதே இதன் சான்றாகும்.

கொரோனா வைரஸை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். கைகளை சுத்தமாக வைத்து கொள்வது, வைரஸ் அறிகுறி இருந்தால் சுயமாக தனிமைப்படுத்தி கொள்வது போன்ற விழிப்புணர்வுடன் கொரோனாவை வேரறுத்து வென்றிடுவோம்.
First published: March 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading