• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமின் மனு தள்ளுபடி

போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தின் ஜாமின் மனு தள்ளுபடி

திருத்தணிகாசலம்

திருத்தணிகாசலம்

போலி சித்த வைத்தியர் தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

  • Share this:
    கொரேனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறியதை தொடர்ந்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் புகார் அளித்ததின் பேரில், போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் கடந்த 6-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருத்தணிகாசலம் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில் குண்டர் சட்டத்த்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தந்தை கலியபெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...

    காலாவதி ஆகும் 1775 பேருந்துகளின் எப்.சி - சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: