திருநள்ளாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்றை சமர்ப்பிக்க வேண்டியதில்லை - உயர்நீதிமன்றம்

திருநள்ளாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்றை சமர்ப்பிக்க வேண்டியதில்லை - உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்.

திருநள்ளாறு சனிபெயர்ச்சியை ஒட்டி, சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்றை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், சனி பெயர்ச்சியை ஒட்டி டிசம்பர் 27ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கும் முடிவை கைவிடக்கோரி கோவிலின் பரம்பரை ஸ்தானிகர்கள் சங்க தலைவரான எஸ்.பி.எஸ்.நாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்வும் உத்தரவிட்டிருந்தார்.

  மேலும் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்துவது தொடர்பாக புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், கோவில் செயல் அலுவலர் மற்றும் புதுச்சேரி, துணைநிலை ஆளுநர், மனுதார் மற்றும் தேவைப்படும் நபர்கள் அடங்கிய கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

  இதன் அடிப்படையில் நேற்று நடந்த கூட்டத்தில், 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனை சான்றிதழை பக்தர்கள் சமர்பிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து காரைக்காலை சேர்ந்த சிங்காரவேலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று அவசர வழக்காக, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் மஞ்சுளா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

  Also read: ’இத்தனை ஆண்டுகளில் சீமானால் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடத்தில்தான் வெற்றிபெற முடிந்தது’ - விஜய் ரசிகர்கள் கிண்டல்

  அப்போது, கோயில் நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை எனவும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய விதிப்படி வெப்ப நிலை பரிசோதனை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்ற முடிவு பண விரயத்தை ஏற்படுத்தி திருநள்ளாறிலலாமல், இது முழுக்க முழுக்க சாத்தியமற்றது எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

  இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வெப்ப நிலை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் நபர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்து கொரோனா அறிகுறிகள் இல்லாத பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: