இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான உயிர்களையும், வாழ்வியல் நோய்களையும் ஏற்படுத்தியுள்ள உருமாறிய கொரோனா வைரஸின் பரவல் விகிதம் மெல்ல குறையத் தொடங்கியிருக்கிறது. மக்களும் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அதேநேரத்தில், 3வது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், 2வது அலையின்போது கிடைத்த அனுபவங்களில் இருந்தும், தவறுகளில் இருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருகிறது. குறிப்பாக, மருத்துவ கட்டமைப்புகளை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை கொரோனா வைரஸ் பரவல் வெளிக்காட்டியுள்ளது. இதேபோல் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
கொரோனா வைரஸ் திரிபுகள் :
கொரோனா வைரஸின் அடுத்தடுத்த திரிபுகள் இன்னும் விரியம் உடையவையாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், உருமாறிய திரிபுகள் வேகமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதும், இணை நோய்களை ஏற்படுத்துவம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. எதிர்வரும் கொரோனா அலையிலும் இந்த பாதிப்புகள் அதிகம் இருக்கும் என்பதால் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதுடன், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
தளர்வுகள் பாதுகாப்பு அல்ல:
கொரோனா வைரஸ் பரவல் விகிதம் குறைந்தவுடன் கொடுக்கப்பட்டிருக்கும் தளர்வுகள் கொரோனா முற்றிலுமாக ஒழிந்துவிட்டதற்கான அறிகுறிகளாக பார்க்கக்கூடாது. எப்போதும்போல் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். முதல் அலை முடிந்தவுடன் கொடுக்கப்பட்ட தளர்வுகளில் முறையாக கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைபிடிக்காமல் இருந்ததால், 2வது அலையின் வீரியம் மிகக் கொடூரமாக இருந்தது. 3வது அலையில் அத்தகைய பாதிப்புகளை தவிர்க்க வேண்டும் என்றால், பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
சமூக இடைவெளி, இரட்டை முகக்கவசம்:
கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால் சமூக இடைவெளி மற்றும் இரட்டை முகக்கவசங்களை அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கூட்டம் மற்றும் நெரிசல் நிறைந்த பகுதிகளே கொரோனா சங்கமிக்கும் இடமாக இருக்கிறது. அந்த இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவ வேண்டும், தேவையானபொழுது மட்டும் வெளியே செல்லுதல் அவசியம். வைரஸ் இன்னும் முழுமையாக ஒழியவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தடுப்பூசி:
சார்ஸ் கோவிட் 2 மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. அறிகுறி இல்லாமலும், லேசான மற்றும் மிதமான பாதிப்பு, இன்னும் சிலருக்கு கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்தியதை பார்த்தோம். அடுத்தடுத்த வேரியண்டுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், தடுப்பூசி மட்டுமே நம்மிடம் இருக்கும் ஆயுதம். அதனை தவிர்க்காமல் அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கவனத்தில் கொள்ள வேண்டியது:
ஏற்கெனவே கூறியதுபோல் வைரஸ் இன்னும் முழுமையாக ஒழிந்துவிடவில்லை. தளர்வுகள் வைரஸ் ஒழிந்துவிட்டதற்கான பச்சைக்கொடி அல்ல என்பதை புரிந்து கொண்டு முறையாக மாஸ்க் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்து முறையான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தவறுகள் மற்றும் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்தடுத்த அலைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.