மக்கள் ஆக்ஸிஜனுக்காக கண்ணீர் விட்டு கதறுகின்றனர், அவர்கள் தேர்தல் கூட்டங்களில் ஜோக் அடித்து சிரிக்கின்றனர்: மோடி, யோகி மீது பிரியங்கா தாக்கு

மக்கள் ஆக்ஸிஜனுக்காக கண்ணீர் விட்டு கதறுகின்றனர், அவர்கள் தேர்தல் கூட்டங்களில் ஜோக் அடித்து சிரிக்கின்றனர்: மோடி, யோகி மீது பிரியங்கா தாக்கு

பிரியங்கா காந்தி

கொரோனா வைரஸ் நோய்ப்பரவலை கண்டுப்பிடிக்க போதிய பரிசோதனைகள் வசதி இல்லை என்று உ.பி. பாஜக தலைமை யோகி ஆதித்யநாத் அரசு மீது காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வதேரா கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

 • Share this:
  கொரோனா வைரஸ் நோய்ப்பரவலை கண்டுப்பிடிக்க போதிய பரிசோதனைகள் வசதி இல்லை என்று உ.பி. பாஜக தலைமை யோகி ஆதித்யநாத் அரசு மீது காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வதேரா கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

  மருத்துவ உட்கட்டமைப்புகளுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று பிரியங்கா சாடியுள்ளார்.

  இதற்கிடையே நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து 22 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநில் நாசிக்கில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டருக்கு ஆக்ஸிஜன் மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக வாயுக்கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 22  பேர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை 30-35 ஆக அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

  இது தொடர்பாக பிரியாங்கா காந்தி வதேரா கூறியதாவது:

  உ.பி. அரசின் செரோ சர்வே என்ன கூறுகிறது தெரியுமா? 5 கோடி பேர் கோவிட் 19 நோயுடன் தொடர்பில் இருப்பவர்கள் என்று கூறுகிறது. இதனால் கொரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. 70% ஆண்டிஜென் டெஸ்ட் நடத்தியதாக அரசே கூறுகிறது, அப்படியெனில் 30% தான் ஸ்வாப் டெஸ்ட் எனும் ஆர்டி-பிசிஆர் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

  எது முக்கியம்? மக்கள் உயிரா, உங்கள் எண்களா? அல்லது உங்கள் அரசின் மீதான இமேஜா? ஆண்டிஜென் டெஸ்ட் எடுத்து விட்டு கொரோனா எண்ணிக்கையை குறைத்துக் காட்டுகிறீர்கள். தனியார் லேப்களும் சோதனை செய்ய வேண்டாம் என்று நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இந்த நிலையிலும் தேர்தல் பிரச்சாரம் மட்டும் கன ஜோராக செய்கின்றனர். மக்கள் ஆக்ஸிஜனுக்காக கண்ணீர் விட்டு கதறுகின்றனர். ஆனால் அவர்களோ பிரச்சார மேடையில் சிரித்துக் கொண்டும் ஜோக் அடித்துக் கொண்டும் இருக்கின்றனர். மக்கள் படுக்கைக்காக, உயிருக்காக, பிராணவாயுவுக்காக கதறுகின்றனர், நீங்கள் மேடைகளில் நின்று கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

  மன்மோகன் சிங் எப்படிப்பட்ட மனிதர், மரியாதைக்குரியவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் நாட்டின் கொரோனா பெருந்தொற்றில் கவலையடைந்து உளப்பூர்வமாக சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

  அவரைப்போன்ற மரியாதைக்குரிய வணக்கத்துக்குரிய முன்னாள் பிரதமர் ஒருவர் ஆலோசனை கூறுகிறார் என்றால் அதனை அதே மரியாதையுடன் அணுக வேண்டும். ஆனால் அவர்களோ இதையும் அரசியலாக்கி கேலியும் கிண்டலும் செய்தால் உருப்படுமா?

  என்று கேள்வி எழுப்பினார்.

  உ.பியில். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, கோவிட் நோயாளிகள் இடமில்லாமல் திருப்பி அனுப்பப் படுகின்றனர். டெஸ்ட்டுக்காக வரிசையில் காத்திருப்பவர்கள் பலருக்கு காய்ச்சல், இருமல், போன்ற கோவிட் அறிகுறிகள் தென்படுவதாக அங்கிருந்து வரும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  Published by:Muthukumar
  First published: