• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • உலகையே அழிக்க முடிந்தவர்களால் மக்களைக் காக்க முடியவில்லை - சீமான்

உலகையே அழிக்க முடிந்தவர்களால் மக்களைக் காக்க முடியவில்லை - சீமான்

சீமான்.

சீமான்.

"அறிவியல் எப்போதும் அறவியலாகத்தான் இருக்கவேண்டுமே தவிர அழிவியலாக இருக்கக் கூடாது."

  • Share this:
    உலகையே அழிக்க முடிந்தவர்களால் கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க முடியவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.

    கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலகமே திணறிக்கொண்டிருக்கிறது. வல்லரசு நாடென்று சொல்லப்படும் அமெரிக்கா கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் இதனால் அவதியுற்று வருகின்றனர். ஏராளமான உயிரிழப்புகள் அங்கு ஏற்பட்டுள்ளன. இதேபோல இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளும் தவித்து வருகின்றன.

    இந்நிலையில், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: ”உலகை அழித்து முடிக்க வேண்டுமென்றால் ஐந்து நாட்களிலேயே செய்து காட்டிருப்பார்கள். காப்பாற்ற வேண்டும் என்றவுடன் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அறிவியல் எப்போதும் அறவியலாகத்தான் இருக்கவேண்டுமேயொழிய அழிவியலாக இருக்கக் கூடாது. கொரோனோ நமக்கு நடத்தியிருக்கும் பெரும்பாடம். அனைவரும் கற்போம்!” என்று கருத்துரைத்துள்ளார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: