பெயர் மாற்றினால் போதுமா... பாதுகாப்பு வேண்டாமா? - குமுறும் தூய்மை பணியாளர்கள்!

பெயர் மாற்றினால் போதுமா... பாதுகாப்பு வேண்டாமா? - குமுறும் தூய்மை பணியாளர்கள்!
தூய்மை பணியாளர்கள்
  • Share this:
சென்னையில் தூய்மை பணியில் ஈடுபடும் மாநகராட்சி பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் தீவிரமடைந்து வருகின்றது. இதுவரை 40 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், தடுப்பு பணிகளில் ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், கையுறை அணிய வேண்டும், ஒருவருக்கு ஒருவர் மூன்று அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.


இந்நிலையில், சென்னை முழுவதும் 15,000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு உரிய சுகாதார பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை என்று பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் அவர்கள் பணிக்கு வருவதற்கு வாகன வசதிகளும் இல்லாமல், கட்டிட கழிவு அகற்றும் வாகனத்தில் 10 முதல் 15 பணியாளர்கள் நெருக்கமாக நிற்கவைத்து அழைத்து வரப்படுகின்றனர்.காலை 6 மணிக்கு பணிக்கு வரும் அவர்களுக்கு காலை உணவு கிடைக்க வழியில்லை என்றும், மாநகராட்சி கொடுக்கும் ஒரு பொட்டலம் மத்திய உணவு போதவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.அது போல தங்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், "துப்புரவு பணியாளர்கள்" என்று அழைக்கப்பட்ட தங்களை "தூய்மை பணியாளர்கள்" என்று மாற்றி அரசு சமீபத்தில் உத்தரவிட்டது தங்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்த அவர்கள், தேவைப்படும் சுகாதார தேவைகளையும் நிறைவேற்றி தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

Also see...
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading