Home /News /coronavirus-latest-news /

சொந்த ஊர் செல்ல சென்ட்ரலில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள் - கேள்விக்குறியான தனிமனித இடைவெளி

சொந்த ஊர் செல்ல சென்ட்ரலில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள் - கேள்விக்குறியான தனிமனித இடைவெளி

"பயணம் செய்வதற்கு ரயில் நிலையத்திற்குள் காத்திருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களிடையே தனிமனித இடைவெளிகள் பின்பற்றப்படாமல் இருந்தது காண முடிந்தது"

சொந்த ஊர் செல்ல நேற்று சென்ட்ரலில் புலம்பெயர் தொழிலாளர்கள் குவிந்தனர். அப்போது அவர்களுக்கிடையே தனிமனித இடைவெளி இல்லாமல் இருந்தது அதிர்ச்சியை அளித்தது. 

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலம் ஏராளமானோர் பல மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லத் துவங்கியுள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று மாலை 7 மணி அளவில் பீகார் செல்வதற்கும், இரவு 9 மணியளவில் திரிபுரா செல்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் மதியம் முதலே குவியத் துவங்கினர்.

சிறப்பு ரயில்களில் செல்வதற்கு முன்பதிவு செய்திருந்த தொழிலாளர்கள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், முன்பதிவு செய்யாத பல தொழிலாளர்கள் ரயில் நிலைய வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.

மேலும், பயணம் செய்வதற்கு ரயில் நிலையத்திற்குள் காத்திருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களிடையே தனிமனித இடைவெளிகள் பின்பற்றப்படாமல் இருந்தது காண முடிந்தது.

Also see...

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus, Migrant workers

அடுத்த செய்தி