பெரம்பலூரில் கடந்த 2 நாட்களாக புதிய கொரோனா தொற்று இல்லை - பொதுமக்கள் மகிழ்ச்சி
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கு ஒற்றை இலக்க எண்ணில் இருந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தொற்று பாதிப்பு இல்லை.

கோப்புப் படம்
- News18 Tamil
- Last Updated: December 1, 2020, 4:45 PM IST
தமிழகமெங்கும் கொரோனா தொற்று வேகமாக பரவிய போது பெரம்பலூர் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதனை கட்டுப்படுத்த 55,000 கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,239 பேருக்கு மட்டும் தொற்று உறுதியான நிலையில், அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 2,216 பேர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினர். 21 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், தற்போது 2 பேர் மட்டுமே கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக புதிய தொற்று ஏதும் ஏற்படவில்லை. ஆரம்ப காலகட்டத்திலிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டதே தற்போதைய நிலைக்கு காரணம் எனக் கூறும் அதிகாரிகள் பொதுமக்களின் ஒத்துழைப்பிற்கும் நன்றி கூறுகின்றனர்.
மேலும் படிக்க...கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்களுக்கான அபராத நடைமுறைகள்.. ரத்துசெய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.. உயிரிழப்போ, புதிய தொற்றோ இல்லாத நிலை ஏற்பட்டாலும் கொரோனா பரிசோதனையை மேலும் அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர். தற்போதைக்கு பாதிப்புடன் மருத்துவமனையை அணுகுவோரை மட்டுமே சோதனைக்கு உட்படுத்துவதாகவும், குக்கிராமங்கள் தோறும் பரிசோதனையை அதிகா்ரித்து நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக புதிய தொற்று ஏதும் ஏற்படவில்லை. ஆரம்ப காலகட்டத்திலிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டதே தற்போதைய நிலைக்கு காரணம் எனக் கூறும் அதிகாரிகள் பொதுமக்களின் ஒத்துழைப்பிற்கும் நன்றி கூறுகின்றனர்.
மேலும் படிக்க...கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்களுக்கான அபராத நடைமுறைகள்.. ரத்துசெய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்..
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.