கோவில்பட்டியில் பணிக்குச் செல்ல வந்த அரசு ஊழியர்கள் பேருந்து இல்லாததால் ஏமாற்றம்

கோவில்பட்டியில் பணிக்குச் செல்ல வந்த அரசு ஊழியர்கள் பேருந்து இல்லாததால் ஏமாற்றம்

கோவில்பட்டியில் பஸ் இல்லாமல் அரசு ஊழியர்கள் தவிப்பு

ஊழியர்கள் பஸ் நிலையத்தில் காத்திருப்பதை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் போக்குவரத்துறையினர் வந்து ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்

  • Share this:
இன்று முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என்ற அரசின் ஆணையை ஏற்று அலுவலகம் செல்ல பஸ் நிலையத்திற்கு வந்த அரசு ஊழியர்கள் கோவில்பட்டியில் பஸ் இல்லாமல் தவித்தனர். 

தமிழகம் முழுவதிலும் கொரோனா ஊரடங்கு காரணமாக குறைந்த அளவு ஊழியர்களை கொண்டு சுழற்சி முறையில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் அனைத்து அரசு அலுவலங்களிலும் ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் பணிக்கு செல்வதற்காக கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்திற்கு காலை 7 மணிக்கு வந்தனர்.

அலுவலத்திற்கு செல்லுவதற்கு அரசு சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்து இருக்கும் என்று நம்பி வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சுமார் 2மணி நேரத்திற்கு மேலாக நின்று இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படாத காரணத்தினால் ஊழியர்கள் விரக்தி அடைந்தனர்.

ஊழியர்கள் பஸ் நிலையத்தில் காத்திருப்பதை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் போக்குவரத்துறையினர் வந்து ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எவ்வித உத்தரவும் வரவில்லை என்பதால் பஸ் இயக்க முடியாது என்று அரசு போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்ததை தொடர்ந்து ஊழியர்கள் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

அரசு இன்று பணிக்கு வர வேண்டும் என்று அறிவித்த காரணத்தினால் ஆர்வமுடன் காலையில் 7 மணியில் இருந்து காத்திருந்தோம். ஆனால் எவ்வித பேருந்தும் இயக்கப்படவில்லை என்றும், மேலும் தங்கள் பகுதியில் இருந்து பஸ் நிலையத்திற்கே வருவதற்கும் சிரமப்பட்டு தான் வர வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அரசு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vaijayanthi S
First published: