• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தமிழ்நாட்டில் ரெம்டிஸ்விர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறதா? காரணம் என்ன?

தமிழ்நாட்டில் ரெம்டிஸ்விர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறதா? காரணம் என்ன?

ரெம்டெசிவர் - கொரோனா மருந்து

ரெம்டெசிவர் - கொரோனா மருந்து

கொரோனா சிகிச்சையில் முக்கிய மருந்தாக இருக்கும் ரெம்டிஸ்விர்-ருக்கு தமிழ்நாட்டில் தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • Share this:
    கொரோனா நோயாளிகளுக்கு முதல் மூன்று நாட்களில் ரெம்டிஸ்விர் கொடுத்தால் நோயாளியின் உடல்நிலை மோசமாவதை தடுக்க முடியும் என்று கூறும் மருத்துவர்கள், தற்போது ரெம்டிஸ்விர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால், ஸ்டிராய்டு வகை மருந்துகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

    ரெம்டிஸ்விர் மருந்து உற்பத்தியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் குறைத்ததும், தட்டுப்பாடு நிலவ முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு ரெம்டிஸ்விர் மருந்துகளை மத்திய அரசு முன்னுரிமை அடிப்படையில் வழங்கியது.

    இந்தியாவில் ஆறு நிறுவனங்கள் மட்டுமே ரெம்டிஸ்விர் மருந்து தயாரிக்க அனுமதி உள்ளது. ஆனால், அந்த நிறுவனங்கள் எதுவும் தமிழ்நாட்டில் இல்லாததும், இந்த மருந்துக்கான தட்டுப்பாடு தமிழ்நாட்டில் நிலவ ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்கு 10 லட்சம் டோஸ் என்ற அளவில் ரெம்டிஸ்விர் மருந்தை உற்பத்தி செய்து வந்த சைடஸ் நிறுவனம், தனது தினசரி உற்பத்தியை கணிசமாக உயர்த்தி உள்ளது. இதேபோல் பிற நிறுவனங்களும் டெம்டிஸ்விர் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் 1,49,872 ரெம்டிஸ்விர் மருந்து இருப்பதாகும் தனியார் மருத்துவமனைகள் கேட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    தமிழகத்தில் 10 சதவிகித கொரோனா தொற்றாளர்களுக்கு மட்டுமே ரெம்டிஸ்விர் மருந்தின் தேவை இருப்பதாகவும், யாருக்கு இந்த மருத்தை கொடுக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் தான் முடிவு செய்வார்கள் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    மேலும் படிக்க... முகக்கவசம் அணிவதால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன?

    இதனைதொடர்ந்து ரெம்டெசிவர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் உற்பத்தியை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது 7 உற்பத்தியாளர்கள் மூலம் மாதத்திற்கு கிட்டத்தட்ட 39 லட்சம் குப்பிகள் தயாராகின்றன. மேலும் 10 லட்சம் குப்பிகள் தயாரிக்கும் வகையில் 7 உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக 30 லட்சம் குப்பிகள் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதே போன்று கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் டோசிலிசுமாப் ( tocilizumab) மருந்தும் தட்டுப்பாட்டில் உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: