கொரோனாவுக்கு டஃப் கொடுக்க கசாயத்தை காய்ச்சி குடிக்கும் கிராமத்தினர்...

கொரோனாவுக்கு டஃப் கொடுக்க கசாயத்தை காய்ச்சி குடிக்கும் கிராமத்தினர்...
கொரோனாவுக்கு டஃப் கொடுக்க கசாயத்தை காய்ச்சி குடிக்கும் கிராமத்தினர்
  • Share this:
கொரோனாவுக்கு டஃப் கொடுக்க சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 25 மூலிகை கொண்ட கஷாயத்தை பொதுமக்களுக்கு காய்ச்சி வழங்கி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பாப்பா ஊரணியை சேர்ந்த காட்டு நாயக்கர் சமூகத்தினர், இப்பகுதியில் 300 குடும்பத்தினர் உள்ளனர். பழைய துணிகள், பிளாஸ்டிக் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக கூறி,  25 மூலிகை கொண்ட கஷாயத்தை காய்ச்சி வழங்கி வருகின்றனர்.
ஆடாதோடை, அக்ரகாரம், கற்பூரவள்ளி, திப்பிலி, சிந்திலி, கோரைக்கிழங்கு, சிறுதேக்கு, கோஸ்டம், நிலவேம்பு, கடுக்காய்தூள், இலவங்கம், முள்ளி, வட்டத்திருப்பி, சுக்கு, சிறுகாஞ்சொறி, தூதுவளை, வேம்புபட்டை, வேப்பஇலை, காம்பு, பூண்டு, சீரகம், மிளகு உள்ளிட்ட 25 மூலிகைகளை காய்ச்சி தாங்கள் பருகுவதுடன் அருகில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கும் தினமும், காலை மாலையும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இதனை மக்கள் தூக்கு வாளிகளை கொண்டு வந்து வாங்கி செல்கின்றனர். இவற்றை பருகுவதன் மூலம்  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிறார்கள்.

அதுமட்டுமன்றி வெளியாட்கள் யாரும் வீட்டுக்குள் வரக்கூடாது என்றும், வேப்பிலையை வீடுகளின் முன்புறம் கட்டி வைத்து, காலை, மாலையில் மஞ்சள் தண்ணீரை வீட்டுக்குள்ளும், வீட்டை சுற்றியுள்ள பகுதியிலும் தெளித்து வருகின்றனர்.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்