இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை... தமிழகத்திலும் சிறப்பு ஏற்பாடு
ஒத்திகை நடைபெறும் இடங்களில் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வாயில்களும், மூன்று அறை வசதிகளும் இருக்கும்.

மாதிரி படம்
- News18 Tamil
- Last Updated: January 2, 2021, 6:38 AM IST
தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இன்று (ஜனவரி 2) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாப், அசாம், ஆந்திரா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் குறித்த ஒத்திகை கடந்த செவ்வாய்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது. பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜனவரி 2ம் தேதி ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தவும், மாநில தலைநகரங்களில் குறைந்தது 3 இடங்களில் ஒத்திகையில் ஈடுபடவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் இடங்களில், சம்பந்தப்பட்ட மருத்துவ பொறுப்பு அதிகாரி, ஒத்திகைக்கான 25 சுகாதார பணியாளர்களை அடையாளம் காண்பார். இவர்கள் பற்றிய தகவல்கள் கோ-வின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அடையாளம் காணப்பட்ட நபர்கள், ஒத்திகை நடைபெறும் இடத்திற்கு வரவழைக்கப்படுவார்கள். அப்போது போதுமான இடவசதி, இணையவசதி, தளவாட ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்படும்.
ஒத்திகை நடைபெறும் இடங்களில் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வாயில்களும், மூன்று அறை வசதிகளும் இருக்கும். ஐஇசி எனும் தகவல், கல்வி தொடர்பு சாதனங்களும் இடம்பெற்றிருக்கும். தடுப்பூசி போடும் மையத்தில் செவிலியர் எங்கே நிற்க வேண்டும், மக்கள் எப்படி வரிசையில் வர வேண்டும் என ஒத்திகை நடைபெறும். தடுப்பூசி போடப்பட்ட பிறகு அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கண்டறிய சில நிமிடங்கள் தனியாக அமர வைப்பது, தடுப்பூசி போட வருபவர்களின் விவரங்களை கையேட்டில் பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
ஒத்திகையில், தடுப்பூசி வழங்கல், அதன் சேமிப்பு உள்ளிட்டவற்றை நிர்வகிப்பது குறித்து மாநிலங்கள் பரிசோதித்து பார்க்க உள்ளன. இதற்காக 96,000 தடுப்பூசி செலுத்துனர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், விலையில்லா கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக, தமிழகத்தில் 2, 881 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் சென்னை, நீலகிரி, நெல்லை உள்ள மாவட்டங்களில் உள்ள 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இதில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, சாந்தோம் மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆரம்ப நிலையங்கள், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நேமம் ஆரம்ப சுகாதார நிலையம் என ஐந்து இடங்களில் ஒத்திகை நடைபெறும்.
இதேபோல், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி, குன்னூர் அரசு மருத்துவமனை, நிலக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திலும், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி, நெல்லை மாநகராட்சி மற்றும் ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையங்களிலும் ஒத்திகை மேற்கொள்ளப்படும். இதற்காக 21, 000 செவிலியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
பஞ்சாப், அசாம், ஆந்திரா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் குறித்த ஒத்திகை கடந்த செவ்வாய்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது. பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜனவரி 2ம் தேதி ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தவும், மாநில தலைநகரங்களில் குறைந்தது 3 இடங்களில் ஒத்திகையில் ஈடுபடவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.