Coronavirus Vaccine | கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை 4 மாநிலங்களில் தொடங்கியது

Coronavirus Vaccine | கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை 4 மாநிலங்களில் தொடங்கியது

மாதிரி படம்

Coronavirus Vaccine | கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களில் தடுப்பூசி ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்குமாறு பாரத் பயோடெக், சீரம், ஃபைசர் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இதையடுத்து, கொரோனா தடுப்பூசிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி விரிவான திட்டங்களை வகுத்துள்ள மத்திய அரசு, கொரோனா தடுப்பூசி மருந்துகளை சேமித்து வைப்பதற்கான குளிர்ப்பதன கிடங்குகளை எங்கெங்கு ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வு நடத்தியுள்ளது. மேலும், முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி மருந்து செலுத்த இலக்கு நிர்ணயித்து இருப்பதோடு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடவும் முடிவு செய்துள்ளது.

    எனவே, அவர்களது பட்டியலை நாடு முழுவதும் தயாரித்துள்ளதோடு, தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் குழப்பத்தை தவிர்க்க 2 நாள் ஒத்திகையையும் நடத்தி வருகிறது. ஆந்திரா, பஞ்சாப், குஜராத், அசாம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள தலா 2 மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகை தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்பட்டுள்ள தலா 5 மையங்களில் தலா 25 பேருக்கு தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படுகிறது.

    நேற்று தொடங்கிய ஒத்திகை 2 நாட்கள் நடைபெறும். இதில் பங்கேற்பவர்கள் அந்தந்த மையங்களில் காலையிலேயே வரவழைக்கப்பட்டு தனிமனித இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு, குளிர்ப்பதன சேமிப்புக் கிடங்கில் இருந்து எவ்வளவு நேரத்தில் தடுப்பூசி முகாமுக்கு மருந்து கொண்டு வரப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள ஒத்திகை நடத்தப்படுகிறது.

    தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு அரை மணி நேரத்தில் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகே, அவர்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அசாம் மாநிலத்தில் சோனித்பூர், நல்பாரி மாவட்டங்களிலும், ஆந்திராவில் கிருஷ்ணா உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் படிக்க...இங்கிலாந்தில் ஒரே நாளில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா

    இதன் முடிவில் ஒத்திகையின்போது ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்றும், அதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும்போது ஏற்படும் சிக்கல்களை அறிந்து, அதற்கு தீர்வு காண முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: