சென்னையில் 12 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு எண்ணிக்கை
சென்னை ஆலந்தூர் மண்டலத்திலும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதால், மொத்தம் 12 மண்டலங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் தாண்டியுள்ளது.

கோப்புப் படம்
- News18 Tamil
- Last Updated: June 25, 2020, 1:34 PM IST
சென்னை மண்டலங்களின் கொரோனா பாதிப்பு விவரங்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி ராயபுரம் மண்டலத்தில் 200க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் தொற்று பரவியுள்ளதால், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,000 நெருங்குகிறது.
இரண்டாவதாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5500ஐ தாண்டியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்திலும் பாதிப்பு எண்ணிக்கை 5300ஐ கடந்துள்ளது.
Also read... அடுத்த ஒருவாரத்தில் கொரோனா பாதிப்பு 1 கோடியை எட்டும்... உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தகவல்!
கோடம்பாக்கம், அண்ணா நகர் மண்டலங்களிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5000 நெருங்குகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 668 ஆக உயர்ந்துள்ளதாகவும், 26,472 பேர் குணமடைந்திருப்பதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.