• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • மூத்த மருத்துவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றவில்லை - அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தகவல்

மூத்த மருத்துவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றவில்லை - அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தகவல்

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூத்த மருத்துவ அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்றவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • Share this:
    கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றுவோருக்கு கடும் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா மாதிரி எடுக்கும் கருவிகள், மாஸ்க், உணவு மற்றும் போக்குவரத்து போன்றவற்றுக்கு போதிய ஏற்பாடு செய்யப்படவில்லை என புகார் எழுந்தது.

    இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், மூத்த மருத்துவர்கள் பலர், மற்ற மருத்துவர்களோடு ஒருங்கிணைந்து பணியாற்றவில்லை என தெரிவித்துள்ளனர்.

    மருத்துவக் கண்காணிப்பாளரின் பணி காலியாக இருக்கும் நிலையில், தற்காலிக மருத்துவக் கண்காணிப்பாளருக்கு பல்வேறு பணிச்சுமைகள் இருப்பதால், மருத்துவர்களை கவனிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    Also read...  தொடர் கண்காணிப்பில் கொரோனா வர வாய்ப்புள்ள 3.5 லட்சம் பேர் - சென்னை மாநகராட்சி






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: