Home /News /coronavirus-latest-news /

அரசுத் தேர்வுத்துறை உதவி இயக்குநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

அரசுத் தேர்வுத்துறை உதவி இயக்குநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கோப்புப்படம்

கோப்புப்படம்

அரசுத் தேர்வுத்துறை உதவி இயக்குநருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் தேர்வுத்துறை இயக்குநர் வளாகம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

அரசுத் தேர்வுத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த உதவி இயக்குநருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக் கல்வித் துறை அலுவலக வளாகத்தில் அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகம் உள்ளது.

அங்கு தேர்வுத்துறை இயக்குநர் அறையில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனோ பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அவருடன் பணிபுரிந்த அலுவலர்கள் அவர்கள் விருப்பத்தின் பெயரில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Also see...

ஜூன் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus, Education department, Examination

அடுத்த செய்தி