சாலையோர மனிதர்களுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்... கட்டுப்பாடுகள் விதித்த திருச்சி ஆட்சியர்!

சாலையோர மனிதர்களுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்... கட்டுப்பாடுகள் விதித்த திருச்சி ஆட்சியர்!
உணவு வழங்கும் தன்னார்வலர்கள்
  • Share this:
சாலையோரம் உள்ளவர்களுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்களுக்கு கட்டுப்பாடுகளை திருச்சி ஆட்சியர் விதித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால், சாலையோரங்களில் தங்கி இருப்போர்,  மன நோயாளிகள் உள்ளிட்டோர் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

அம்மா உணவகங்கள் திறந்திருந்தாலும் பலர் அங்கு செல்ல முடியாத நிலையிலும் தெரியாமலும் உள்ளனர். அவர்களின் பசியைப் போக்கும் வகையில் திருச்சியைச் சேர்ந்த பல்வேறு தன்னார்வலர்கள், நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். திருச்சி மாநகரில் 200க்கும் மேற்பட்டவர்கள் இப்படி உணவுத் தேவையில் இருப்பதாக சொல்கிறார்.


கடந்த மூன்று நாட்களாக இலவசமாக உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்து வரும் மனிதம் அமைப்பின் தினேஷ்குமார். குறிப்பாக சாலையோர மனநோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் உதவு கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். அவர்களைக் கண்டறிந்து உதவ வேண்டும். இதற்கான களப்பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தினேஷ் சொல்கிறார்.

இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சாலையோரங்களில் இருப்போருக்கு தன்னார்வ அமைப்புகள் நேரடியாக உணவு வழங்க மாவட்ட ஆட்சியர் சிவராசு தடை விதித்துள்ளார்.

உணவு விநியோகம் செய்ய விரும்புவோர் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை மாவட்ட நிர்வாகத்திடம் நேரடியாக வழங்கலாம்.  இதற்காக 94450 74602 செல்போன்  எண்ணில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.இந்நிலையில், சுகாதாரத்துறையினருக்கு தகவல் அளித்து, அவர்களின் அனுமதியோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி உணவு வழங்கி வருவதாக தன்னார்வாலர் தினேஷ் தெரிவிக்கிறார்.

Also see...
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading