Home /News /coronavirus-latest-news /

போக்குவரத்து இல்லாமல் எப்படி பணிக்கு வருவது? தபால் துறை ஊழியர்கள் கேள்வி

போக்குவரத்து இல்லாமல் எப்படி பணிக்கு வருவது? தபால் துறை ஊழியர்கள் கேள்வி

 தபால் அலுவலகம் (கோப்புப்படம்)

தபால் அலுவலகம் (கோப்புப்படம்)

”மத்திய அரசு அலுவலகங்களில் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யவில்லை என்ற நிலை தற்போது நிலவி வருகிறது”

தபால் துறை ஊழியர்கள் கட்டாயம் நூறு சதவீத பணியாளர்கள் வரவேண்டுமென சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ள நிலையில் பொது போக்குவரத்து இல்லாமல் அலுவலகம் செல்ல முடியாத சூழல் நிலவுவதாக தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசு ஊழியர்கள் இன்று பணிக்கு வரவேண்டுமென தெரிவித்த நிலையில் பெரும்பாலான மத்திய அரசு அலுவலகங்களில் குறைந்த அளவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், தபால் துறையில் மட்டும் 100 சதவீதம் அளவிற்கு பணியாளர்கள் கட்டாயம் வரவேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பொதுப் போக்குவரத்து இல்லாமல்  இருக்கும் போது தங்கள் வாகனங்களை பயன்படுத்தினாலும் போலீசார் தடுத்து நிறுத்தி அடையாள அட்டை கேட்கின்றனர். ஆனால் அடையாள அட்டை வைத்திருந்தால் கூட அவர்கள் நம்ப மறுத்து திரும்பிப் போகச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள். அதையும் மீறி செல்ல முற்பட்டால் அபராதம் விதிக்கும் சூழல் நிலவுவதாக தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசு அலுவலகங்களில் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்ய வில்லை என்ற நிலை தற்போது நிலவி வருகிறது. கிருமிநாசினி முக கவசம் கையுறை உள்ளிட்ட அத்தியாவசிய பாதுகாப்பு பொருட்களை தராத காரணத்தினால் நோய் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Lockdown

அடுத்த செய்தி