இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது, ஒரே நாளில் 2,023 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது, ஒரே நாளில் 2,023 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

    நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த் தொற்று எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது 3 லட்சத்தை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் உயர்ந்து வருகிறது.

    இதனால் நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, மற்றும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதேபோல கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

    இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,56,16,130 ஆக உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது

    நேற்று ஒரே நாளில் 2,023 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,82,553 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,32,76,039 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,67,457 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதிலும், பல்வேறு மருத்துவமனைகளில் 21,57,538 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று வரை 13,01,19,310 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 27,10,53,392 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 16,39,357 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read :  தமிழகத்தில் தடையில்லாமல் தடுப்பூசி போடப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

     

    இந்நிலையில், தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 10,986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,250 பேர் குணமடைந்துள்ள நிலையில், 48 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: