Coronavirus | இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.... கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவாக, ஒரே நாளில் 35,000 பேருக்கு தொற்று

Coronavirus | இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.... கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவாக, ஒரே நாளில் 35,000 பேருக்கு தொற்று

கோப்புப் படம்

இந்தியாவில் கடந்த 102 நாட்களில் இல்லாத அளவிற்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

  • Share this:
    மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக, நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும், கொரோனா பரவலின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது.  அந்த வகையில் நேற்று ஒரே நாளில், 35,871 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த 102 நாட்களில் இல்லாத அளவிற்கு புதிய உச்சமாகும்.

    சிகிச்சைக்குப் பிறகு 17,741 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி மேலும் 172 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் மட்டும் 23, 179 பேர் பாதிக்கப்பட்டு, 84 பேர் பலியாகினர். நேற்று பதிவான நாட்டின் மொத்த பாதிப்பில், 65 சதவிகிதம் மகராஷ்டிராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, நாக்பூர், புனே, அமராவதி போன்ற பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    மேலு படிக்க... கொரோனா 2வது அலையை தடுத்து நிறுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

    இதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உத்தரபிரதேச மாநிலத்தில் காசியாபாத் மற்றும் நொய்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் மறு உத்தரவு வரும் வரை பேருந்துகள் இயக்கப்படாது எனவும்,  பூங்காக்கள் அனைத்தும் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு 5ம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கி அறிவித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: