புதுச்சேரி: கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5,000 அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்..

புதுவையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 437-ஆக உயர்ந்துள்ளது என்றும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி: கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5,000 அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்..
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: September 18, 2020, 3:43 PM IST
  • Share this:
புதுச்சேரியில் நாள் ஒன்றிற்கு கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5,000  உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியின் கொரோனா நிலை குறித்து  சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் விடுத்துள்ள வீடியோ பதிவில், புதுச்சேரியில் நேற்று 5,344 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் புதிதாக 492 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 397,  காரைக்காலில் 45, ஏனாமில் 45, மாகேயில் 5 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


நேற்று ஒரே நாளில் புதுவையில் 353, காரைக்காலில் 69, ஏனாமில் 24, மாகேயில் 16 பேர் என மொத்தம் 462 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று கூறியுள்ளார்.Also read... இந்தியாவில் மொத்தமாக 382.. கொரோனா தொற்றால் தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவர்கள் உயிரிழப்பு.. முழுவிவரம்..

புதுச்சேரியில் ஒட்டுமொத்தமாக 21,913 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16,715 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவனை, வீட்டு தனிமையில் 4,763 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நேற்று புதுவையில் 5 பேர், காரைக்காலில் ஒருவர் என 6 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். புதுவையில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 437-ஆக உயர்ந்துள்ளது என்றும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading