சென்னை அண்ணாநகரில் ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
சென்னையில் 6-வது மண்டலமாக அண்ணா நகரிலும் தொற்று எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது. ராயபுரம், தண்டையார்பேட்டையில் 24 மணி நேர்த்தில் 100-க்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோப்புப் படம்
- News18 Tamil
- Last Updated: May 28, 2020, 12:19 PM IST
தமிழகத்தில் மே 27-ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட 817 தொற்றுகளில், சென்னையில் 558 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது. இதில், 5,765 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 93 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 107 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் 102 பேரும், அண்ணாநகரில் 71 பேரும், தேனாம்பேட்டை 55 பேரும், திரு.வி.க.நகரில் 40 பேரும், கோடம்பாக்கம் 34 பேரும், திருவொற்றியூரில் 25 பேரும், அம்பத்தூரில் 20 பேரும், அடையாறு 19 பேரும், வளசரவாக்கத்தில் 19 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், மாதவரத்தில் 18 பேரும், மணலியில் 12 பேரும், சோழிங்கநல்லூரில் 11 பேரும், பெருங்குடியில் 9 பேரும், ஆலந்தூரில் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:
ராயபுரம் - 2252
கோடம்பாக்கம் - 1559திரு.வி.க.நகர் - 1325
தேனாம்பேட்டை - 1317
தண்டையார்பேட்டை - 1262
அண்ணா நகர் - 1046
வளசரவாக்கம் - 777
அடையாறு - 672
அம்பத்தூர் - 504
திருவொற்றியூர் - 369
மாதவரம் - 274
சோழிங்கநல்லூர் - 208
பெருங்குடி- 212
மணலி - 168
ஆலந்தூர் - 165
ராயபுரத்தில் கடந்த 16-ஆம் தேதி தொற்று எண்ணிக்கை 1000 ஐ கடந்தது. அடுத்த 10 நாட்களில் ராயபுரத்தில் 2000 ஐ கடந்தது. தொடர்ந்து, கோடம்பாக்கம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் தொற்று எண்ணிக்கை 1000-ஐ கடந்தது. இந்நிலையில், சென்னையில் 6வது மண்டலமாக அண்ணா நகரிலும் தொற்று எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளது. அதேவேளையில், கோடம்பாக்கம் மண்டலத்தில் கடந்த ஒரு வாரமாக தொற்று பரவல் வேகம் குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த 9 நாட்களாக 500-க்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னையில் 5,074 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட 1431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சென்னையின் மொத்த பாதிப்பில் 11.7 சதவிகிதமாகும். அதேபோல், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 517 பேர் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also see...
சென்னையில் 9 நாட்களில் 5000-ஐக் கடந்த பாதிப்பு: கூடுதலாக 34,500 படுக்கைகளை தயார் செய்கிறது மாநகராட்சி
சென்னையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 107 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் 102 பேரும், அண்ணாநகரில் 71 பேரும், தேனாம்பேட்டை 55 பேரும், திரு.வி.க.நகரில் 40 பேரும், கோடம்பாக்கம் 34 பேரும், திருவொற்றியூரில் 25 பேரும், அம்பத்தூரில் 20 பேரும், அடையாறு 19 பேரும், வளசரவாக்கத்தில் 19 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், மாதவரத்தில் 18 பேரும், மணலியில் 12 பேரும், சோழிங்கநல்லூரில் 11 பேரும், பெருங்குடியில் 9 பேரும், ஆலந்தூரில் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.