சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 594 ஆக குறைவு - மாநகராட்சி புதிய பட்டியல் வெளியீடு

கடந்த 14 நாட்களாக புதிதாக தொற்று கண்டறியப்படாத 41 பகுதிகளில் இன்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 

சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 594 ஆக குறைவு - மாநகராட்சி புதிய பட்டியல் வெளியீடு
கோப்பு படம்
  • Share this:
சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 635ல் இருந்து 594 ஆக குறைந்துள்ளது. 

கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் இருக்கும் பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்படும். இந்தப் பகுதிகளுக்கு ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்துள்ள தளர்வுகளும் எதுவும் பொருந்தாது.

வெளி நபர்கள் யாரும் இந்தப் பகுதிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகளின் இன்றைய பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

நாளுக்கு நாள் சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஒரு சில கட்டுப்பாட்டு பகுதிகளில் புதிய தொற்று வருவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று புதிதாக வெளியிட்டுள்ள பட்டியலில் சென்னையில் கடந்த 14 நாட்கள் தொற்று கண்டறியப்படாத 41 பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.தேனாம்பேட்டை-6, அண்ணா நகர்-6, அம்பத்தூர்-5, அடையாறு - 5, இராயபுரம்-4, கோடம்பாக்கம்-3,திரு.வி.க.நகர்-3,  சோழிங்கநல்லூர் - 3, பெருங்குடி-2, மணலி-2, வளசரவாக்கம்-1, தண்டையார்பேட்டை-1 பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

நேற்று வரை 517 பகுதிகளில் பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்ப்பட்டிருந்த நிலையில், இன்றைய 41 பகுதிகளை சேர்ந்து இதுவரை, மொத்தம் சென்னையில் 558 பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்ப்பட்டுள்ளன.

அதேபோல், நேற்று பட்டியலில் சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 635 ஆக இருந்த நிலையில், இன்றைய பட்டியலில் 594 ஆக குறைந்துள்ளது.

இராயபுரம் - 131,

திரு.வி.க.நகர் - 98,

அம்பத்தூர் - 52,

மாதவரம் - 56,

தேனாம்பேட்டை- 48,

மணலி - 42,

கோடம்பாக்கம் - 33,

திருவொற்றியூர் - 32,

அடையாறு - 19,

சோழிங்கநல்லூர் - 18,

வளசரவாக்கம் - 17,

அண்ணா நகர் - 9,

தண்டையார்பேட்டை- 13,

ஆலந்தூர் - 14,

பெருங்குடி - 12 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading