CoronaVirus : தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 10 நாட்களில் 10 ஆயிரத்தை கடந்துள்ளது

கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டதை அடுத்து, 2 வார ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒருநாள் பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து விட்டதால், இந்திய அளவில் 4வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக 2வது இடத்திற்கு சென்றுவிட்டது. கொரோனா 2வது அலையில் தொற்றுக்கு ஆளாகிறவர்களுக்கு நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படுவதால் இளம் தலைமுறையினர் முதல் முதிர்ந்தவர்கள் வரை ஆக்சிஜன் படுக்கைகளை சார்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழ்நாட்டில் 1,264 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்ட 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 10,669 சிறுவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Must Read :  கரும் பூஞ்சைத் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை

     

    குடும்ப உறுப்பினர்கள் மூலமே குழந்தைகள் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது கண்டறியப்படும் நோய் தொற்றுகளில் சுமார் 40 விழுக்காடு அளவுக்கு பிளஸ்டக் எனப்படும் குடும்ப தொற்று மூலமாகவே ஏற்படுவதாக கூறும் மருத்துவர்கள், மக்கள் பொதுவெளிகளை போலவே வீடுகளிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
    Published by:Suresh V
    First published: